Home இலங்கை குற்றம் வவுனியாவில் வனவள திணைக்கள அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

வவுனியாவில் வனவள திணைக்கள அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

0

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வனவள திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோத முறையில் கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதாக வனவள திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

வனவள திணைக்களத்தினருக்கு இன்று (11.06.2025) கிடைத்த இரகசிய தகவலினையடுத்து மாவட்ட வனவள திணைக்கள அதிகாரி அஜித் ஜயசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ், வனவள உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

விசேட நடவடிக்கை

இந்நடவடிக்கையின் போது 27 முதிரை குற்றிகள் மீட்கப்பட்டதுடன் இரு கப் ரக வாகனமும் மீட்கப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியாவில் உள்ள மரக்காளையில் இருந்து அனுமதி பெறப்படாத 13 இலட்சம் பெறுமதியான தேக்கு மர பலகைகள் மீட்கப்பட்டதுடன், பறையநாலங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காடழிப்புக்கு பயன்படுத்திய டோசர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version