வீட்டுக்குள் புகுந்து ஒரு கோடிக்கும் அதிகமான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த ‘ஹெலவ ரமேஷ்’ என அழைக்கப்படுபவர் தங்காலை பொலிஸின் குற்றங்களை கட்டுப்படுத்தும் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வீரகெட்டிய பொல்தாலவேன பகுதியில் வசித்து வந்த 36 வயதுடையவராவார். சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது,
இவர் பல கொள்ளை, போதை பொருள் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.
முக்கொலை
அத்தோடு மித்தெனிய தோரகொலயாய பகுதியில் நடந்த முக்கொலை சம்பவத்திற்கு துப்பாக்கித்தாரிக்கு தன்னுடைய மோட்டார் சைக்கிளை வழங்கியுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளும் திருப்பட்டதாகும்.
அதற்காக திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த தெம்பிலி லஹிரு 5 கிராம் ஹெரோயின் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 09.10.2025ஆம் திகதி வீரகெட்டிய பகுதியிலுள்ள கடைக்கு சிகரெட் வாங்க சென்ற சந்தர்ப்பத்தில் அந்த கடையின் மேல் மாடியில் அமைந்துள்ள வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த ஒரு கோடிக்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளார்.
ஒரு கோடி கொள்ளை
சந்தேக நபர் வீரகெட்டிய பகுதியில் வானில் சென்று கொண்டிருந்த போது பொலிஸார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்போது அவரிடமிருந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் பெரும் தொகை பணம், மீல்லி மீட்டர் 9 துப்பாக்கி ரவைகள், டி56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 02 ரவைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொள்ளையிட்ட நகைகளை விற்பனை செய்து 21 இலட்சம் பெறுமதியான் வான் ஒன்றையும் வாங்கியுள்ளார். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், பெரிய கத்தியும் பொலிஸார் எடுத்துள்ளனர்.
