முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாணக்கியனின் முகம் சுழிக்கவைக்கும் செயல்!!

அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மட்டக்களப்புக்கு வருகைதந்திருந்த வேலன் சுவாமிகளிடத்தில் சாணக்கியன் நடந்துகொண்ட விதம் மட்டக்களப்பில் பல தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை முகம் சுழிக்கவைத்துள்ளதாக அக்கட்சியின் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.

‘சாணக்கியினின் அன்றைய அந்தச் செயற்பாடு, கருணா பிள்ளையான் போன்றவர்கள் வெளியிட்டுவந்த ‘யாழ்-விரோத பிரதேசவாத’ நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக இருப்பதாக கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

2021ம் ஆண்டு பொத்துவில் முதல் பொலிகண்டிவரையில் நடைபெற்ற மக்களின் ஊர்வலத்தில் சாணக்கியன் தனது புகைப்படம் பொறிக்கப்பட்ட பதாதையை தானே சுமந்துகொண்டு நடந்து விளம்பரம் தேட முற்பட்ட செயலைச் சுட்டிக் காண்பித்த அந்த விரிவுரையாளர், சாணக்கியன் போன்ற வளர்ந்துவருகின்ற ஒரு இளம் அரசியல்வாதி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது என்பது மட்டக்களப்பு மக்களை முகம் சுழிக்கவைக்கும்படியாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

முகம் சுழிக்கவைத்த சாணக்கியனின் செயல்!

முகம் சுழிக்கவைத்த சாணக்கியனின் செயல்!

மக்கள் போராட்டங்கள் மக்கள் போராட்டங்களாகவே வெளிக்காண்பிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் அந்தப் போராட்டங்களுக்குப் பலம். அதனை அரசியல்வாதிகள் கபளீகரம் செய்யமுற்படுதென்பது மிக மோசமான ஒரு பகல்க்கொள்ளை மாத்திரமல்ல மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயலும் கூட என்பதை சாணக்கியனைப் போன்ற அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வேலன் சுவாமிகள் விடயத்தில் அன்றைய தினம் சாணக்கியன் நடந்துகொண்ட விதம் மட்டக்களப்பில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்களை தலைகுணியவைத்ததாகக் கோபத்துடன் கூறினார் ஒரு முன்நாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்.

அன்றைய தினம் சாணக்கியன் போராடும் ஒரு இனத்தின் பிரதிநிதிபோல நடந்துகொள்ளாமல், ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு அதிகாரிபோல நடந்துகொண்டதாகக் குற்றம்சுமத்தினார்.

சாணக்கியன் நடந்துகொண்ட முறை அப்பட்டமாக ஒரு கடும் பிரதேசவாதியின் செயற்பாடுபோலவே இருந்ததாகக் கவலை வெளியிட்டார்.

சாணக்கியனின் அந்தச் செயல்பற்றி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையே நடாத்தியிருந்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்களும், காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோரும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் சாணக்கியன் நடந்துகொண்ட விதம் பற்றி கடும் கண்டனம் வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக நடைபெற்ற மற்றொரு ஊடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வேலன் சுவாமிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.

சாணக்கியன் தொடர்பாக வெளிவந்துகொண்டிருக்கின்ற கருத்துக்கள் பற்றி மட்டக்களப்பு  முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கின்ற போது, இலங்கையில் இனவிடுதலைப் போராட்டம் மிக உக்கிரமாக நடைபெற்று, ஆயிரக்கணக்கில் தமிழ் இளைஞர்களும், தமிழ் மக்களும் தங்களுடைய இன்னுயிர்களை அகுதியாக்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அந்தப் போராட்டத்திற்கு ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப் போடாத ஒருவர்தான் சாணக்கியன்.

அதுமாத்திரமல்ல, ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் படுகொலைசெய்து தமிழின அழிப்பை மேற்கொண்டு இரத்தம் தோய்ந்த கைளுடன் வந்துகொடிருந்த மகிந்த ராஜபக்சவுடன் கூச்சமேயில்லாமல் இணைந்து அந்த தமிழ் இன அழிப்பை நியாயப்படுத்தி தேர்தலில் போட்டிபோட்ட ஒருவர்தான் சாணக்கியன்.

அதாவது தமிழ் மக்களின் உணர்வுகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் புரிந்துகொள்ளமுடியாத ஒரு நபர்தான் சாணக்கியன்.

இன்னும் கூறப்போனால் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான உணர்வுகளைக் கொண்ட ஒரு நபர்.
அப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து தமிழ் தேசிய உணர்வை எதிர்பார்பது முட்டாள்தனமான ஒரு காரியம்.

தமிழரசுக் கட்சியின் தலைமை ஒரு காலத்தில் மேற்கொள்ள ஆரம்பித்திருந்த புலிநீக்க அரசியலின் மற்றொரு கருவிதான் சாணக்கியன் என்று அவர் தெரிவித்தார். 

https://www.youtube.com/embed/EkPNqgFGtY4?start=28https://www.youtube.com/embed/Txq13BcfYjEhttps://www.youtube.com/embed/Cmo7FqwN15Y

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்