Home இலங்கை சமூகம் யாழ். நெடுந்தீவில் உயிருடன் மீட்கப்பட்ட முதலை

யாழ். நெடுந்தீவில் உயிருடன் மீட்கப்பட்ட முதலை

0

நெடுந்தீவில் உயிருடன் மீட்கப்பட்ட முதலை ஒன்று கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள்
திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக நடவடிக்கைகள் 

இதனை தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகளை
மேற்கொண்டு கடற்படைப் படகுமூலம் குறிகாட்டுவனுக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், வாகனமூடாக கிளிநொச்சி பிரதேச வன
ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது. 

நெடுந்தீவு – வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக
வற்றிப்போன பாழடைந்த கிணற்றில் இருந்தே குறித்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version