Home இலங்கை சமூகம் நாட்டில் பாரியளவு குறைவடைந்துள்ள வனப்பரப்பளவு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

நாட்டில் பாரியளவு குறைவடைந்துள்ள வனப்பரப்பளவு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0

நாட்டின் தற்போதைய வனப்பரப்பளவு 29 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக வனவளப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க (Nishantha Edirisinghe) தெரிவித்துள்ளார்.

கண்டியில் (Kandy) நேற்று(17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காட்டுத் தீ, வனப் பிரதேசங்களுக்குள் அத்துமீறிய சட்டவிரோத மனிதச் செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளினால் இவ்வாறு வனப்பரப்பளவு குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வேலைத்திட்டங்கள்

ஆளிலில்லா விமானங்களினூடாக நாட்டின் 8 மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மீண்டும் வனப்பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக வனப் பகுதிகள் அழிவடைந்த இடங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் வனப்பரப்பளவை 32 சதவீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனவளப் பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version