Home இலங்கை சமூகம் நாட்டில் அதிரடியாக உச்சம் தொடும் மரக்கறி விலைகள்

நாட்டில் அதிரடியாக உச்சம் தொடும் மரக்கறி விலைகள்

0

மரக்கறி விலைகள் எதிர்பாராதளவுக்கு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

டிட்வா புயலால் பயிர்கள் அழிவடைந்ததைத் தொடர்ந்து இவ்வாறு மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளது.

விநியோகமில்லாத நிலையில் உள்ளூர் கடைக்காரர்கள் விலைகளை உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில கடைகள்

சமூகவலைத்தளங்களில் உலவும் காணொளியின்படி சில கடைகளில் பச்சை மிளகாய் கிலோ 3,000 ரூபாய்க்கும், கரட் மற்றும் லீக்ஸும் கிலோ 2,800 ரூபாய்க்கும் அத்தோடு, கத்தரிக்காய் 800 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

இதேவேளை பல்பொருள் அங்காடிகளிலும் மற்றும் பலசரக்குக் கடைகளிலும் சாமான்களை தொடர்ந்து மக்கள் வாங்கி வருகையில் பொருட்களின் விலைகள் இன்னும் உயருமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version