ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு நேற்று (ஜூன் 15ஆம் நாள்) இலண்டனில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கிளி மக்கள் அமைப்பு உள்ளிட்ட ஐந்து சமூக இலக்கிய அமைப்புகள் இணைந்து நடாத்த ஐந்து நிறுவனங்கள் அனுசரணை வழங்க சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு இலண்டனில் Alperton Community Schoolஇன் பிரமாண்ட அரங்கில் இடம்பெற்றது.
முதன்மைப் பிரதியை பத்மநாப ஐயர் பெற்றுக்கொண்டார்.
மாதவி சிவலீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாவல் குறித்து ரஜிதா சாம், சக்திவேல், மயூரன், சுகுணா, ஆனந்தி, மிதுனா ஆகியோர் உரையாற்றினர். துவாரகி சுந்தரமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
முதன்மைப் பிரதியை ஈழத்தின் நூலக ஆளுமை பத்மநாப ஐயர் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் பிரித்தானிய உறவுகள் பலரும் கலந்துகொண்டு சிறப்புப் பிரதிகளைப் பெற்றிருந்தனர்.
எழுச்சியும் வீழ்ச்சியும் கண்ட ஈழத் தமிழ் வரலாறு
கடந்த சனவரி 03ஆம் நாள் சென்னையிலும் கடந்த மார்ச் 29ஆம் நாள் கிளிநொச்சியிலும் வெளியீடு கண்ட பெருங்களங்கள் கண்ட ஈழத்தளபதியின் கதையான தீபச்செல்வனின் சயனைட் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்ட ஈழத் தமிழ் வரலாறு குறித்த நாவல் ஆகும்.
நிஜக் கதையை தழுவிய வீரகாவியத்தின் துயரமாக அமையப்பெற்ற இந்த நாவல் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு இடையில் மறுபதிப்பையும் கண்டு வரவேற்பைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
