Home இலங்கை சமூகம் டித்வா புயல் காரணமாக திருகோணமலையில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

டித்வா புயல் காரணமாக திருகோணமலையில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

0

சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில்
மொத்தமாக 12319 குடும்பங்களை சேர்ந்த 39030 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 200 கிராம சேவகர்
பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.11.29 இன்று (29) மதியம் 12.00 மணி
வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்காலிக முகாம்

இதில் 424 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 11533
குடும்பங்களை சேர்ந்த 36775 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

14 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 786 குடும்பங்களை
சேர்ந்த 2255 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 360 குடும்பங்களை
சேர்ந்த 1056நபர்களும், தம்பலகாமம் 369 குடும்பங்களை சேர்ந்த 1149
நபர்களும்,மொறவெவ 105 குடும்பங்களை சேர்ந்த 321 நபர்களும்,சேருவில 206
குடும்பங்களை சேர்ந்த 676 நபர்களும், வெருகல் 398 குடும்பங்களை சேர்ந்த 1272
நபர்களும்,மூதூர் 4024 குடும்பங்களை சேர்ந்த 11754 நபர்களும்,கிண்ணியா 2375
குடும்பங்களை சேர்ந்த 7763 நபர்களும்,கோமரங்கடவல 226 குடும்பங்களை சேர்ந்த 730
நபர்களும் , பதவிஸ்ரீபுர 371 குடும்பங்களை சேர்ந்த 1187 நபர்களும், குச்சவெளி
3682 குடும்பங்களை சேர்ந்த 12412 நபர்களும், கந்தளாய் 203 குடும்பங்களை
சேர்ந்த 710 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version