Home இலங்கை சமூகம் யாழில் மாவீரர் ஒருவரின் நினைவிடத்தை சேதப்படுத்திய விசமிகள்

யாழில் மாவீரர் ஒருவரின் நினைவிடத்தை சேதப்படுத்திய விசமிகள்

0

யாழில் மாவீரர் ஒருவரின் நினைவாலயம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயமே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

சேதப்படுத்திய விசமிகள்

இவர் கடந்த 1985ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த நிலையில் அவரது நினைவாலயம் மேற்குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாவீரர் நாளன்று பி.ப 06.05 மணிக்கு குறித்த நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று (28) காலை குறித்த பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஊர்மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version