Home இலங்கை சமூகம் தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பரிதாப மரணம்

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பரிதாப மரணம்

0

மன்னார் (Mannar) – பூவரசங்குளம் பகுதியில் தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் முருங்கன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான தந்தை ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார்.

மேலதிக விசாரணை

இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/daughter-dies-after-getting-stuck-in-machine-1718315465

NO COMMENTS

Exit mobile version