இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்கள் (NEV)
அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் ஒட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய ஒட்டோ உற்பத்தியாளர் GWM உடன் இணைந்து இந்த வாகனங்களை அறிமுகப்படுத்துவதாக தெரியவருகிறது.
கூட்டாண்மை அறிவிப்பு
ஒட்டோ மொபைல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த
கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஹவல் H6, ஹவல் GT, டேங்க் 300 மற்றும் டேங்க் 500 உள்ளிட்ட GWM இன்
ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மொடல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
