Home இலங்கை சமூகம் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – மருதடி ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இன்று (05) யாழ். மருதடி வீதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் யாழ். பெருமாள் ஆலயத்தில் கணக்காளராக பணிபுரிந்து வரும் சூழலில்
கடந்த மூன்று மாதகாலமாக தனிமையில் வசித்து வந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

41 வயதான
இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பில் யாழ்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு
சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் (Jaffna teaching hospital) வைக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/qYpkC5LNmaQ

NO COMMENTS

Exit mobile version