Home இலங்கை கல்வி வடக்கு – கிழக்கு மாணவர்களின் மாபெரும் விவாதம் : சாதனை படைத்த பாடசாலைகள்

வடக்கு – கிழக்கு மாணவர்களின் மாபெரும் விவாதம் : சாதனை படைத்த பாடசாலைகள்

0

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பாடசாலை மாணவர்களுக்கான பிரம்மாண்டமான விவாத அரங்கம் ஒன்று கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றத்தினரால் நடாத்தப்பட்டது.

வடக்கு – கிழக்கு மாகாணத்தின் 123 பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட விவாதப்போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று (11) திருகோணமலை (Trincomalee) – உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில்  நடத்தப்பட்டது.

“தர்க்கச் சுழல்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட குறித்த விவாதப் போட்டியில் சாதனை படைத்த பாடசாலைகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

வெற்றி பெற்ற பாடசாலைகள்

அந்த வகையில், நூறுக்கு மேற்பட்ட பாடசாலைகள் போட்டியிட்ட இந்தப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது.

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றி வாகை சூடியுள்னர்.

மூன்றாம், நான்காம் இடங்களை முறையே வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் கல்லூரி மாணவர்கள் பெற்று வெற்றியை நிலைநாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற விவாத அரங்கத்திற்கு றீச்(ஷா) பிரதான அனுசரணை வழங்கியதுடன் ஐபிசி தமிழ் ஊடக அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version