Home இலங்கை பொருளாதாரம் எரிபொருள் விலை உயர்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை!

எரிபொருள் விலை உயர்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை!

0

அரசால் வழங்கப்படும் எரிபொருள் மானியங்கள் ஜூன் மாதத்தில் முடிவுக்கு வரவிருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) அதிகாரிகள் பொது நிதிக் குழுவிடம் (COPF ) தெரிவித்ததுள்ளனர்.

பொது நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அதிகாரிகள், எரிபொருள் விலை உயர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மேலும் கூறியுள்ளார்.

எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், இந்தச் சூழலில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்வது போன்ற நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மே 13 அன்று தெரிவித்துள்ளார்.

சிறப்பு குழுக் கூட்டம்

நுவரெலியா மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு மத்தியில், ஒரு லீற்றர் டீசலின் உள்ளூர் விலை ரூ. 720 ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு ரூ. 392-க்கு டீசல் விநியோகம் செய்வதற்காக, அரசு ஒரு லிட்டர் லீற்றர் ஏறக்குறைய ரூ. 100 மானியம் வழங்குவதால், சிபிசி தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வருவதாகவும், இந்த நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்றும் அவர் மேலும் கூறியுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/decision-yet-to-be-made-on-fuel-price-hikeg-1781338408

NO COMMENTS

Exit mobile version