முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைகள்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். 

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024) குறித்த கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

ஆணவம் பிடித்து செயற்பட்ட கோட்டாபய! அழிவுக்கு இதுதான் காரணம் என்கிறார் கருணா

ஆணவம் பிடித்து செயற்பட்ட கோட்டாபய! அழிவுக்கு இதுதான் காரணம் என்கிறார் கருணா

உரிய அனுமதி

காக்கைத்தீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்துக்கொள்வதற்கும், மீன்பிடி துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் உரிய அனுமதிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைத்தனர்.

சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைகள் | Demand Of Fishermen Governor Of Northern Province

ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் கூறினார்.

ஒன்றிணைந்த அழைப்பு

அத்துடன் மீன்பிடி துறையை துப்பரவு செய்வதற்கான தற்காலிக அனுமதியை பெற்றுக் கொடுப்பதாகவும், உள்ளுராட்சி மன்றத்தினூடாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை உரியவகையில் முன்னெடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைகள் | Demand Of Fishermen Governor Of Northern Province

மேலும் அயல் கிராமங்களுடன் சினேகபூர்வமாக செயற்பட்டு, ஒன்றிணைந்த அழைப்பை விடுக்கும் பட்சத்தில் நேரடியாக களத்திற்கு வருகை தரவும் தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம கடற்றொழிலாளர்களிடம் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை: வெளியாகப்போகும் புதிய சுற்றறிக்கை

ஆசிரியர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை: வெளியாகப்போகும் புதிய சுற்றறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்! 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்