Home இலங்கை சமூகம் யாழ்.சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இருந்து இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி

யாழ்.சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இருந்து இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி

0

யாழ்.சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட நுணாவில் கிழக்கு கல்வயல் வீதியில்
அமைந்திருந்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி தனியார் ஒருவரால்
முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோருக்கு
அறிவித்ததையடுத்து குறத்த இடத்திற்குச் சென்று நிலைமைகள் தொடர்பில்
அவதானித்தார்.

பாதுகாக்க நடவடிக்கை

அத்தோடு இடித்த சுமைதாங்கியை இடித்தவர்களை வைத்தே மீண்டும் அமைக்க
நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களை
அடையாளப்படுத்தி தொல்பொருள் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்படாத சின்னங்களை
நகரசபை மூலம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

NO COMMENTS

Exit mobile version