Home ஏனையவை வாழ்க்கைமுறை அதிகரிக்கும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை…

அதிகரிக்கும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை…

0

நாட்டில் டெங்குத் தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.  

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  

அதிகரிக்கும் தொற்று

இதன்படி, 88,088 டெங்கு தொற்றாளர்கள் இதுவரை பதிவாகியுள்ளதுடன், இந்த மாதத்தின் இதுவரையான நாட்களில் 2,733 டெங்கு தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர். 

மேலும், கடந்த ஜூலை மாதம் நாட்டில் 29,975 டெங்கு நோயாளர்கள் பதிவானதுடன், வருடத்தில் மிக  அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதம் பதிவாகியுள்ளனர்.  நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இதேவேளை, வருடத்தின் இதுவரையான நாட்களில் கம்பஹா மாவட்டத்தில் மிக அதிகளவிலான டெங்குத் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.  அடுத்ததாக கொழும்பு மாவட்டம் பதிவாகியுள்ளது.

 இதன்படி, கம்பஹாவில் 18,739 டெங்கு தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 17,490 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://tamilwin.com/article/dengue-deaths-on-the-rise-1785989805

NO COMMENTS

Exit mobile version