Home இலங்கை சமூகம் பிரதி அமைச்சர் முனீர் முழாபர் மூதூருக்கு விஜயம்

பிரதி அமைச்சர் முனீர் முழாபர் மூதூருக்கு விஜயம்

0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூதூர் பகுதிக்கு மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழாபர் இன்று
( 6) விஜயம் மேற்கொண்டார்.

வெள்ளப் பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்து
சம்பந்தப்பட்டவர்களுடன் அவர் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.

மூதுர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

கலந்துரையாடல்

இந்த கலந்துரையாடலில் மூதூர் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்,
திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

​இதனைத் தொடர்ந்து, மூதூர் பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்ற, ஜம்மியத்து உலமா
சபையினருடன் பிரதி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கலந்துரையாடலின் பின்னர், மூதூரில் ஏற்பட்டுள்ள அவசரப் பிரச்சினைகள் குறித்து
அவர் மக்களுக்கு உறுதியளித்தார்.

மூதூரில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் சில மணி நேரங்களில்
கிடைத்துவிடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேண்டுகோள்

கழிவுகளை அகற்றும் நடவடிக்கையின்போது, பொதுமக்கள் ஒருவருக்கொருவர்
முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முடிவாக, இந்த அனர்த்த காலங்களில் மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து
அவர் முக்கிய வேண்டுகோள் விடுத்தார்

​.

பொதுவாக அனர்த்தத்தினால் எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற
மனநிலையில், பொறுமையுடன் செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவர் பொதுமக்களைக்
கேட்டுக் கொண்டார்.

NO COMMENTS

Exit mobile version