Home இலங்கை சமூகம் தேசபந்து தென்னகோனின் முன்பிணை மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோனின் முன்பிணை மனு நிராகரிப்பு

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்வைத்திருந்த முன்பிணை மனுவொன்றை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மனு தாக்கல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தான் கைது செய்யப்டுவதைத் தடுக்கும் வகையில் முன்பிணையொன்றை வழங்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுமீதான விசாரணை இன்றைய தினம் கோட்டை மாஜிஸ்திரேட் லங்கா நிலுபுலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

முன்பிணை மனுவை நிராகரிப்பு

அதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு தேசபந்து தென்னகோனின் முன்பிணை மனுவை நிராகரித்து மாஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version