Home இலங்கை குற்றம் நீதிமன்றத்தை நாடவுள்ள தேசபந்து தென்னகோன்

நீதிமன்றத்தை நாடவுள்ள தேசபந்து தென்னகோன்

0

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரினால் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி, தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி வெலிகமை பிரதேச ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குறித்த சம்பவத்தில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்தமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் அப்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுவொன்று தாக்கல்

இதனையடுத்து தேசபந்து தென்னகோன் தற்போதைக்குத் தலைமறைவாகி உள்ளார்.

இந்நிலையில் நாளைய தினம் (03) திங்கட்கிழமை தேசபந்து தென்னகோன் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரியும், விசாரணைகளுக்கு தான் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்து தேசபந்து தென்னகோன் சார்பில் குறித்த மனு தாக்கல் செய்யப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version