Home சினிமா தனுஷின் D54 படத்தின் பூஜை.. வெளிவந்த புகைப்படம் இதோ

தனுஷின் D54 படத்தின் பூஜை.. வெளிவந்த புகைப்படம் இதோ

0

D54 

போர் தொழில் படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம்தான் D54. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பூஜை

இந்த நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் தனுஷின் ஆஸ்தான இயக்குநரும் நெருங்கிய நண்பருமான வெற்றிமாறன் கலந்துகொண்டுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்கும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று காலை D54 படத்தின் போஸ்டர் வெளிவந்த நிலையில், தற்போது பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..

Source: https://cineulagam.com/article/dhanush-d54-movie-poojai-happened-today-1752130791

NO COMMENTS

Exit mobile version