Home சினிமா நீங்க வாழ்க்கை கொடுத்தவங்க, நேருக்கு நேர் மோதுனா ஓகே.. தனுஷின் மேனேஜர் யாரை தாக்கி பேசினார்?

நீங்க வாழ்க்கை கொடுத்தவங்க, நேருக்கு நேர் மோதுனா ஓகே.. தனுஷின் மேனேஜர் யாரை தாக்கி பேசினார்?

0

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

மேடையில் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசியது தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிச்சி மோதுனா ஓகே..

“பேமஸ் ஆக ரெண்டு வழி இருக்கு.. ஒன்னு ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி டாப்ல போய் உக்கார்றது. ரெண்டவது, டாப்ல இருக்கரவண அடிக்குறது.”

“உங்கள வெச்சி கிராஸ் பண்ணவங்க, உங்களால வளந்தவங்க, நீங்கள் வாழ்க்கை குடுத்தவங்க.. நேருக்கு நேர் நடிச்சி மோதுனா ஓகே. ஒரு கம்பியூட்டர் பின்னாடி உக்காந்து பேசறது..” என ஸ்ரேயாஸ் கூற, அரங்கத்தில் இருந்த தனுஷ் ரசிகர்கள் நீண்ட நேரம் ஆரவாரம் செய்தனர்.

தனுஷின் முந்தைய படம் குபேரா தமிழ்நாட்டில் அதிகம் ட்ரோல்களை சந்தித்தது, அது பற்றி தான் தனுஷின் மேனேஜர் பேசி இருக்கிறார்.

தனுஷால் வளர்ந்த முன்னணி நடிகரை தான் அவர் இப்படி தாக்கி பேசி இருப்பதாக இணையத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version