Home சினிமா தனுஷின் வடசென்னை 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. எதிர்பாராத ஒருவர்

தனுஷின் வடசென்னை 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. எதிர்பாராத ஒருவர்

0

வடசென்னை 2

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

இப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. முதல் பாகத்தின் இறுதியில் ‘வடசென்னை 2′ அன்புவின் எழுச்சி’ என படத்தை முடித்திருப்பார் இயக்குநர்.

குக் வித் கோமாளி கெமி-க்கு அடித்த ஜாக்பாட்.. ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்

இதனால் வடசென்னை 2 படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் பிரபல விருது விழா ஒன்றில் கூட வெற்றிமாறன் இப்படம் விரைவில் வரும் என்று தெரிவித்திருப்பார்.

எதிர்பாராத ஒருவர் 

இந்நிலையில், வடசென்னை 2 படத்தில் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த மணிகண்டன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.     

NO COMMENTS

Exit mobile version