Home சினிமா தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள குபேரா படத்தின் OTT உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா?

தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள குபேரா படத்தின் OTT உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா?

0

தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்தும் இயக்கியும் வெளிவந்த ராயன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. மேலும் இட்லி கடை எனும் படத்தையும் இயக்கி வருகிறார்.

இயக்கத்தை தாண்டி தனுஷ் ஹீரோவாக மட்டும் நடித்து வரும் படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர்.

த்ரிஷாவை விட வயது குறைவு ஆனால் அம்மா ரோலில் நடிக்கும் இந்த நடிகை.. அட இவரா?

OTT உரிமை

இப்படம் வரும் ஜுன் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது, பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தின் OTT உரிமையை கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வரும் நிலையில், பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் ரூ.50 கோடி கொடுத்து குபேரா படத்தின் OTT உரிமையை கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    

NO COMMENTS

Exit mobile version