Home இலங்கை குற்றம் யாழில் மாணவியையும் விட்டு வைக்காத ஆபத்தானவர்கள் – புலம்பெயர் நாடுகளில் சிக்கப்போகும் சிலர்

யாழில் மாணவியையும் விட்டு வைக்காத ஆபத்தானவர்கள் – புலம்பெயர் நாடுகளில் சிக்கப்போகும் சிலர்

0

வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஹாவா குழு உள்ளிட்ட குழுக்களின் முக்கிய புள்ளிகள் வெளிநாடுகளுக்கு தப்பியோடியிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குழுக்களின் இரண்டாம் நிலை குற்றவாளிகளே தற்போது இலங்கையில் உள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் இயங்கும் வாள்வெட்டுக் குழுக்களுக்கான பணம், உண்டியல் முறை மூலம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.

அதாவது ஒரு குற்றச் செயலுக்காக அவர்கள் 10 இலட்சம் வரையான பணத்தைப் பெற்றுள்ளனர்.

இவ்வாறிருக்க, இலங்கையில் நடந்த குற்றச்செயலுக்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து பணம் வழங்கியவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து பல கைதுகள் வெளிநாடுகளில் இடம்பெறலாம். 

இதேவேளை, போதைப்பொருட்களை கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் இந்த கும்பல்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version