Home இலங்கை சமூகம் தேசிய மக்கள் சக்தியின் சர்வாதிகார திட்டம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் சர்வாதிகார திட்டம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை வலுவிழக்கச் செய்து மக்களின் ஜனநாயக
பிரதிநிதிகளை செயற்பட விடாமல் தடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி கிராம
அபிவிருத்தி குழு தலைவர் என்ற பதவியை பிரதேச செயலாளர் ஊடாக நியமனக் கடிதம்
வழங்கப்பட்டு நியமிக்கப்படுவதாக பிரதேச சபை தவிசாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரஜா சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி முழு நாட்டையும் முழு
கிராமத்தின் அதிகாரங்களை தேசிய மக்கள் சக்தியிடம் வலிந்து இழுக்கும் நோக்குடன்
இந்த அரசியல் நியமனம் வழங்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த விடையம் தொடர்பில் கருத்து தெரிவித்த வலி கிழக்கு பிரதேச சபையின்
தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளூராட்சி மன்ற சட்டங்களின் பிரகாரம் ஒரு
நியாயமான தேர்தல் மூலம் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ள நிலையில்
அதற்கு மேலதிகமாக அதிகாரம் வழங்கப்பட்ட கட்சி சார்பு கிராமட்ட தலைவர் ஒருவரை
நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள்

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை
முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் உள்ளூராட்சி மன்றங்களை மலினப்படுத்தி
சர்வாதிகார ஆட்சியை கொண்டு பலப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியினர் போட்ட
திட்டமே கிராம அபிவிருத்தி குழு.

இலங்கை வரலாற்றில் அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்களுடாக தமது அரசியல்
செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த வரலாறுகள் மாறி தேசிய மக்கள் சக்தியினர்
கிராமங்களில் தமது அரசியலை மேற்கொள்வதற்காக உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை
கட்டுப்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

குறித்த நியமனம் தொடர்பில் நாம் விரிவாக ஆராய்ந்து நீதிமன்றத்தை நாடுவதற்கு
சகல நடவடிக்கைகளையும் எடுக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version