Home முக்கியச் செய்திகள் இதற்காகதான் திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக்க வேண்டும்: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

இதற்காகதான் திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக்க வேண்டும்: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

0

பங்களாதேஷ் (Bangladesh) மற்றும் உக்ரைன் (Ukraine)  போன்று இலங்கை மாறாமல் இருப்பதற்கு திலித் ஜயவீரவை (
Dilith Jayaweera)  ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa)  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேசிய மூலோபாய கருத்திட்டம் வெளியீடு நிகழ்வில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க சட்டமூலம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 7 சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

திலித் ஜயவீர

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய இராணுவத்தினரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் சட்டம் இலங்கையில்தான் முதன்முறையாக இயற்றப்பட்டுள்ளது.உலகில் எந்த நாடுகளிலும் இவ்வாறான சட்டங்கள் இயற்றப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘இனம் மற்றும் மத அடிப்படைவாதங்களை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெறும் முரண்பாடுகளை விசாரணை செய்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விரிவுப்படுத்தல்’ என குறிப்பிட்டுள்ளார்.

இடதுசாரி லிபரல்வாதிகளின் நிலைப்பாடு இன்று இவ்வாறு மாற்றமடைந்துள்ளது.

தெளிவான தீர்மானம்

சட்டத்தின் ஊடாக இலங்கையை பிறிதொரு பங்களாதேஷ் மற்றும் உக்ரைன் போன்று மாற்றியமைப்பதை தடுப்பதற்கு தேசியத்துக்காக திலித் ஜயவீரவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் சென்றதன் பின்னர் பிரச்சினைகள் நிறைவடைந்துவிட்டது என்று கருதுவது முற்றிலும் தவறானது.

இலங்கையின் சுயாதீனம் மற்றும் இறையாண்மை இன்றும் அச்சுறுத்தல் நிலையில் காணப்படுகிறது.

உலகுக்கு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி பாடம் கற்பிக்கும் அமெரிக்க ஆசியாவில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டு தமக்கு ஏற்றாற்போல் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளது.

பங்களாதேஷிலும் இலங்கையிலும் இவ்வாறான தன்மையே ஏற்பட்டது. ஆகவே நாட்டு மக்கள் தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version