இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்காக அனைத்து துறையினரும் பாடுபட்டு வருகின்றனர்.
எனினும் இந்தப் பேரிடரின் பின்னர் சில கொடூரமானவர்கள் சுயரூபம் அம்பலமாகி உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களை துன்புறுத்தி தாம் சுகபோக வாழ்க்கை வாழ சில தரப்பினர் முயன்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்னர்.
குறிப்பாக மலையகத்தில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நிவாரணப் பொருட்கள்
உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், சில தரப்பினர் மீண்டும் மீண்டும் நிவாரணம் பெற்று வருகின்றனர்.
அவ்வாறானவர்கள் கடைகளில் அந்தப் பொருட்களை விற்பனை செய்து பணம் பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு சில கிராம உத்தியோகத்தர்களும் துணை போவதுடன், அவர்களும் பண கொள்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசு வழங்கும் நட்டஈடு
அதேவேளை இந்த பேரிடரின் காரணமாக அதிகளவில் விவசாயிகள் மற்றும் பண்ணைத் தொழில் ஈடுபட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
பொதுவாக விவசாய நிலங்களை நீண்டகால குத்தகைக்கு பெற்று விவசாயம் பலர் செய்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கும், அழிவடைந்த விவசாய உற்பத்திகளுக்கும் நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் காணி உரிமையாளர்கள் முன்டியடித்துக் கொண்டு தமது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்திடம் பதிவு செய்து வருகின்றனர்.
சட்ட ரீதியாக நடவடிக்கை
எனினும் குத்தகைக்கு பணமும் செலுத்தி, விவசாய உற்பத்திகளையும் பறி கொடுத்த விவசாயிகள் நாதியற்று, அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் குத்தகைக்கு பெற்று விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் காணி உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி, உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியுதவி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
