நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி
அலுவலர்களுடனான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்
தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்
இன்று (13.11.2024) மு.ப 10.45 மணிக்கு நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்களை
வழங்கினார்.