Home இலங்கை சமூகம் இலங்கையில் வாகன பாவனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் வாகன பாவனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து பொறியியலாளரான நுவான் மதநாயக்க தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய வாகனங்களை இயக்காமல் தொழில்நுட்ப வசதிக்கு கொண்டு சென்று முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.

அனைத்து வகையான ஒயில், பிரேக், பவர் ஸ்டீயரிங், கியர் எண்ணெய், என்ஜின் எண்ணை உட்பட அனைத்தை அகற்ற வேண்டும்.

மேலும் அவை வெண்மையாக மாறியிருந்தால், என்ஜினை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

வாகனங்களின் எஞ்சின்

சுமார் 2-3 நாட்கள் முழுமையாக நீரில் மூழ்கியிருக்கும் வாகனங்களின் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முடியும், ஆனால் அவற்றின் மின் அமைப்புகளைப் பயன்படுத்தவே கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்காலிகமாக மீட்டமைக்கப்பட்டாலும், அது எதிர்காலத்தில் அரிக்கப்பட்டு பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே வாகனத்தை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செயலிழக்கச் செய்ய வேண்டும் அல்லது மூன்றாம் தரப்பு காப்பீடு இருந்தால், மின்சுற்றுகளை முழுமையாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

வாகனத்தின் சஸ்பென்ஷன் அமைப்புகளுடன் தொடர்புடைய கிரீஸ் முழுவதுமாக அகற்றப்பட்டு புதியவற்றைப் பயன்படுத்த வேண்டும். அவற்றின் ரப்பர் பாகங்களை மீண்டும் பொருத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

NO COMMENTS

Exit mobile version