Home இலங்கை சமூகம் என்னுடைய கடைசி ஆயுதமே உண்ணாவிரதப் போராட்டம் : வைத்தியர் அர்ச்சுனா பகிரங்கம்

என்னுடைய கடைசி ஆயுதமே உண்ணாவிரதப் போராட்டம் : வைத்தியர் அர்ச்சுனா பகிரங்கம்

0

சகாதார அமைச்சு (Ministry of Health) எனக்கு வழங்கும் முடிவின் அடிப்படையிலேயே என்னுடைய உண்ணாவிரதப் போராட்டம் தீர்மானிக்கப்படும் எனவும் என்னுடைய கடைசி ஆயுதம் தான் உண்ணாவிரதப் போராட்டம் என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்திலே அவர் நேற்று (22) வெளியிட்டிருந்த காணொளியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை அரசியல்வாதியின் தொலைக்காட்சியில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில் என்னை அழைத்து நேர்காணல் செய்து தனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சு 

மேலும், தனக்கு அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை, ஆனால் அரசியல் தான் என்னுடைய வாழ்க்கையை நாசமாக்கியது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “சுகாதார அமைச்சில் இருந்து இதுவரை எனக்கு எந்தவொரு கடிதமும் வழங்கப்படவில்லை. 

என்னை வைத்திய நிர்வாகத்துறையில் இருந்து நிறுத்தி சாதாரண வைத்திய அதிகாரியாக பேராதனை வைத்தியசாலையில் இணைப்பதாக கடிதம் அடிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் விடயத்திற்கு பொறுப்பானவர் என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கடிதத்தை நான் பார்க்கவில்லை.

சாதாரண வைத்திய அதிகாரியாக நியமிப்பதற்கு எண்ணியிருக்கின்றார்கள் இதற்காக நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செல்வேன்.

25 வைத்தியர்களுக்கும் விசாரணை

நான் வைத்திய நிர்வாகத்துறையில் பணிபுரிந்தது என்றோ ஒரு நாள் இந்த முறைமையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே.

வைத்தியசாலையில் மக்கள் வரிசையில் காத்திருக்காமல் இணையத்தளத்தில் முன்பதிவு செய்துவிட்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வைத்தியர்கள் கடமையில் இருக்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்துதல் போன்ற திறந்த மற்றும் பொதுவான முறைமையை உருவாக்க வேண்டும் என்பது தான் எனது திட்டமாக இருந்தது.

சீரழிந்த சுகாதாரக் கட்டமைப்பின் கீழ் என்னால் பயணிக்க முடியுமா, நான் என்ன செய்தாலும் இவர்கள் அதனை மாற்றிவிடுவார்கள்.

சமூக மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்றால் சுகாதாரத் துறையில் இருந்து செய்ய முடியுமா என்பது கேள்வியாக தான் இருக்கின்றது.

விசாரணை மேற்கொள்வதென்றால் எனக்கு மட்டுமன்றி 25 வைத்தியர்களுக்கும் நடத்த வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/RxXYEIC-dR0

NO COMMENTS

Exit mobile version