Home இலங்கை சமூகம் அநுராதபுரத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வைத்தியர்

அநுராதபுரத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வைத்தியர்

0

அநுராதபுரம்(Anuradhapura), ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரகேவ பிரதேசத்தில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கெப்பித்திக்கொல்லாவ ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் 38 வயதுடைய வைத்தியரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

குறித்த வைத்தியர் குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம்  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/doctor-dies-in-anuradhapura-due-to-wrong-decision-1723532184

NO COMMENTS

Exit mobile version