முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வாதிகாரியாக செயற்படாதீர்கள் : சபாநாயகருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடாளுமன்றத்தை ஒழுங்குப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு சர்வாதிகாரியை போன்று செயற்படாதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை (Badulla) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) தெரிவித்துள்ளார். 

இன்று (06.06.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் முன்னாள் சபாநாயகர்கள் இந்தளவுக்கு ஒருதலைப்பட்சமாக செயற்படவில்லையெனவும், சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை (Jagath Wickramarathne) நோக்கி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை

இதன்போது, நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 92ஆவது பிரிவை சுட்டிக்காட்டி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, “ஒரு அமைச்சின் விடயதானத்துக்குள் உள்ளடங்கும் சகல திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடைய விடயங்களை மேலதிக கேள்வியாக கேட்கலாம்” என்றார்.

சர்வாதிகாரியாக செயற்படாதீர்கள் : சபாநாயகருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Don T Act Like A Dictator Parliament Sri Lanka

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், “ நிலையியற் கட்டளையின் பிறிதொரு ஏற்பாட்டை குறிப்பிட்டு, சமிந்த விஜேசிறியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து உரையாற்றுவதற்கு சமிந்த விஜேசிறி அனுமதி கோரிய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சர்வாதிகாரி 

இவ்வேளையில் சமிந்த விஜேசிறி, சபையை ஒழுங்கு படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு சபாநாயகர் ஒருதலைப்பட்சமான முறையில் சர்வாதிகாரி போல் செயற்படுகிறார். முன்னாள் சபாநாயகர்கள் இந்தளவுக்கு செயற்படவில்லையென குற்றஞ்சாட்டினார்.

சர்வாதிகாரியாக செயற்படாதீர்கள் : சபாநாயகருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Don T Act Like A Dictator Parliament Sri Lanka

இதன்போது சபாநாயகர், நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை வீட்டில் இருந்து முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

பல ஆண்டுகாலமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களுக்கு நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் தெரியவில்லை. இது பெரியதொரு பிரச்சினையாகவுள்ளதன நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை நோக்கி குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.