அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை(Donald Trump) குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தற்போது அதிகமாக புசப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறுவது புதிதல்ல என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிபிட்டார்.
இதேவேளை, ஒரு நாட்டினுடைய முன்னாள் ஜனாதிபதியை மிக இலகுவாக தனிநபர் ஒருவர் தாக்குவதற்கு இலக்கு வைத்து தாக்குதலையும் நடத்தியிருப்பது என்பது உலக நாடுகளின் தலைவர்களது பாதுகாப்பையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாக அமைகின்றது.
குறிப்பாக, ஒரு நாட்டினுடைய முன்னாள் ஜனாதிபதி என்பது மிக உயர்ந்த ஒரு இலக்கு, அதனை தனி நபர் ஒருவர் எட்டிவிட முடியும் என்பதும் ஆபத்தான ஒன்று என்று இராணுவ ஆய்வாளர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ட்ரம்ப் விவகாரத்தில் FBI இன் அடுத்தக் கட்ட நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பிலும் ஆய்வாளர் ஆரூஸ் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,