Home உலகம் ட்ரம்ப் அடுத்த அதிரடி :மாற்றப்பட்டன பெயர்கள்

ட்ரம்ப் அடுத்த அதிரடி :மாற்றப்பட்டன பெயர்கள்

0

அமெரிக்காவின்(us) 47வது ஜனாதிபதியாக கடந்த 20 ஆம்திகதி பதவியேற்ற ட்ரம்ப் (donald trump)பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வந்த உதவிகள் நிறுத்தம், பல்வேறு ஏழை நாடுகளுக்கு வழங்கி வந்த உதவிகள் நிறுத்தம் உட்பட பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது மெக்சிகோ வளைகுடாவின் பெயரையும், வட அமெரிக்காவில் உள்ள மிக உயரமான மலையின் பெயரையும் அவர் மாற்றி உள்ளார்.

மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றம்

மெக்சிகோ வளைகுடா பெயரை “அமெரிக்க வளைகுடா” என்று மாற்றியுள்ள டிரம்ப், டனாலி மலையின் பெயரை மெக்கன்லி என்று மாற்றி உள்ளார்.

இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

டனாலி மலையின் பெயரும் மாற்றம்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வில்லியம்ஸ் மெக்கின்லி அவர்களை கௌரவப்படுத்தும் வகையாக அவரது பெயர் டனாலி மலைக்கு சூட்டப்பட்டதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பெயர் மாற்ற நடவடிக்கையால், அமெரிக்காவின் பாரம்பரியம் காக்கப்படும் என்றும், நாட்டின் நாயகர்கள் மற்றும் வரலாற்று சொத்துக்களை இளைய தலைமுறை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது 

NO COMMENTS

Exit mobile version