Home இலங்கை சமூகம் வடகிழக்கு தழுவிய கதவடைப்பு.. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஆதரவு

வடகிழக்கு தழுவிய கதவடைப்பு.. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஆதரவு

0

வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இளைஞனுக்கு நீதி கோரியும், வடக்கு கிழக்கில் அதிகரித்து காணப்படும் இராணுவ பிரசன்னத்தை முற்றாக நீக்ககோரியும் விடுக்கப்பட்ட 18.08.2025 பொது முடக்க போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பூரண ஆதரவை வழங்குகின்றது.

குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இப்போராட்டத்தின் கனதியை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தொடர் அநீதிகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலும் இடம்பெறவுள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவை வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version