அவதூறுகள் எம்மை நோக்கி வருவதற்கு தேர்தல் அச்சமே காரணம் என ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் இன்று (02.10.2024) இடம்பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“எமது வழிநடத்தலும் அதனை முன்னெடுத்துச் செல்லும் பொறிமுறையும் தான் சரியானது
என கடந்த காலங்களில் மக்கள் எமது பாதையை நோக்கி அணிதிரளத் தொடங்கினர்.
தடம் மாறாத கொள்கை
இதனைக் கண்டு
அச்சமுற்ற தரப்பினர் அரசியல் ரீதியில் நேருக்கு நேர் நின்று வெற்றிகொள்ள
முடியாதுபோன காரணத்தால் எம்மை தோற்கடிப்பதற்காக பல்வேறு அவதூறுகளையும்
சேறுபூசல்களையும் வாரி இறைத்தனர்.
அத்தகையவர்களது குறித்த செயற்பாடுகளால் தோற்கடிக்கப்பட்டது எமது மக்களும்
மக்களது அபிலாசைகளுமே தவிர நாமல்ல.
நாம் என்றும் தனித்துவத்துடன் தடம் மாறாத
கொள்கையுடன் எமது செயற்பாடுகளை மக்களிடம் கொண்டுசென்று வருகின்றோம்.
அதனால்தான் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் மக்கள் என்னை தமது பிரதிநிதியாக
நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.