Home இலங்கை சமூகம் யாழ். பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மரணம்

யாழ். பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மரணம்

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு
காணரமாக இன்றைய தினம் கொழும்பில் காலமானார்.

மாபெரும் இழப்பு..  

வைத்தியரின் இழப்பானது வைத்திய துறைக்கு மாபெரும் இழப்பு என வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுபவர். 

அவர், தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்றிருந்த நிலையில் அங்கு
உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை, வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version