Home ஏனையவை வாழ்க்கைமுறை இயற்கை பேரிடரின் பின்னர் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மரணம் கூட ஏற்படலாம்..

இயற்கை பேரிடரின் பின்னர் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மரணம் கூட ஏற்படலாம்..

0

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள நீர் வடிந்தோடிவிட்டாலும் அந்த இடங்களில் இருந்து பல்வேறு நோய்த் தொற்றுக்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

அவர் மேலும் கூறுகையில்,  

டித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டன.

   

வெள்ளம் தற்போது குறைந்து வரும் நிலையில், நீர் தேங்கி நின்ற இடங்களில் இருந்து டெங்கு, சிக்கன் குனியா மற்றும் தற்போது இலங்கையில் மலேரியா தொற்று இல்லாவிட்டாலும் இது போன்ற நுளம்பால் பரவும் தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அதே போன்று அசுத்தமான பகுதிகளில் வாழும் மக்களிடையே எலிக்காய்ச்சல் நோய் அதிகரிக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஏனெனின் எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காயங்கள் போன்ற ஒரு ஊடகத்தை பயன்படுத்தி உடலுக்குள் சென்று விடும்.

  

இதனால் எலிக்காய்ச்சல் பற்றிய அவதானம் மக்களிடையே இருக்க வேண்டும். இது குணப்படுத்தக்கூடிய நோய் என்றாலும், இதனால் மரணம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.

தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவிலான பாதிப்புக்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பருவ காற்று மழை வரும் காலப்பகுதியில் தொற்றுநோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனுடன் ஒப்பிட்டு பார்க்கையில், அனர்த்தங்களினால் தாக்கம் பெரிதாக இல்லை  என  தெரிவித்துள்ளார். 

             

NO COMMENTS

Exit mobile version