டிராகன்
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் டிராகன். இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
ஆம், 10 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது ரூ. 150 கோடி பாக்ஸ் ஆபிஸ் இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது.
குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ஓடிடி
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரதீப்பின் டிராகன் படம் எப்போது ஓடிடி-யில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவலின்படி டிராகன் படம் வருகிற மார்ச் 21ம் தேதி முதல் ஓடிடி-யில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.