முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வினோதமான முறையில் கடத்தப்பட்ட போதைப்பொருள்! தமிழர் பகுதியில் சிக்கிய இளைஞன்

மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்தினுள் சூட்சமமான முறையில் ஐஸ் போதை பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்

மன்னார் காவல்துறை குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் சாவற்கட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்! தொடரும் விசாரணை

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்! தொடரும் விசாரணை

மேலதிக விசாரணை

விடத்தல் தீவு பகுதியில் இருந்து R15 ரக மேட்டார் சைக்கிளில் வருகை தந்த குறித்த இளைஞன் தலைகவசத்தின் உட்பகுதியினும் சூட்சமமான முறையில் 20 கிராம் 850 மில்லிகிராமம் ஐஸ் போதை பொருளை மறைத்து வைத்திருந்த நிலையின் கைது செய்யப்பட்டுள்ளார்.

வினோதமான முறையில் கடத்தப்பட்ட போதைப்பொருள்! தமிழர் பகுதியில் சிக்கிய இளைஞன் | Drug Smuggling New Method

குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ள மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்