Home இலங்கை குற்றம் துசித ஹல்லோலுவ விளக்கமறியலில்..!

துசித ஹல்லோலுவ விளக்கமறியலில்..!

0

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவர், தேசிய லொத்தர் சபையின் பதில் பணிப்பாளராக இருந்த காலத்தில் ரூ.470,000க்கும் அதிகமான மதிப்புள்ள கணினி மற்றும் கையடக்க தொலைபேசியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டு பின்னர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

 கைதுக்கான காரணம் 

இதற்கிடையில், இந்த மாதம் நாரஹேன்பிட்டி பகுதியில் துசித ஹல்லோலுவ மற்றும் அவரது சட்டத்தரணியை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்தும் பொலிஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

NO COMMENTS

Exit mobile version