ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு மற்றும் உத்தியோகபூர்வ தேர்தல் அறிவித்தல் விநியோகம் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.
வாக்காளர் அட்டை
அத்துடன், அனைத்து வீடுகளுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 8,000 தொழிலாளர்கள் நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பான முறையில் மாற்றுவதற்கு தபால் திணைக்களங்கள் கடமைப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.