Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

0

மின்னணு கடவுச் சீட்டு (E-Passport) வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு இறக்குமதி

அதன்படி, இ-கடவுச்சீட்டு வழங்கும் பணியை சுமார் 8 மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது கடவுச்சீட்டு வழங்குவது வழக்கமான நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தநிலையில், 1 மில்லியன் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை நாட்டிற்கு இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்  சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version