Home இலங்கை சமூகம் கடவுசீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு

கடவுசீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு

0

ஜூன் மாத இறுதியில் இருந்து காலாவதியாகும் அனைத்து கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ‘இ-பாஸ்போர்ட்’ திட்டம் வெளியிடப்படும் வரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நீட்டித்துள்ளது.

ஜூன் 30 ஆம் திகதிக்குள் பத்து ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகும் கடவுசீட்டுகள் ஒரு வருடம் வரை இலவசமாக நீட்டிக்கப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய திட்டம்

புதிய எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்கள் புதிய கடவுசீட்டை இ-பாஸ்போர்ட்டாக மாற்றிக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

புதிய இ-பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு ஏலங்கள் கோரப்பட்ட பின்னர் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குடிவரவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version