போக்குவரத்து விதிமீறல்கள், பிற குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த செயலியானது, சிறிலங்கா காவல்துறையினரால் இன்று (01) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது இ-ட்ராஃபிக் (E-Traffic) என்று அழைக்கப்படுகிறது.
தகவல் பதிவேற்றம்
இந்த செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, போக்குவரத்து விதிமீறல்கள், குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்யலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இந்த செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.