Home முக்கியச் செய்திகள் இன்று அதிகாலை நிலநடுக்கத்தால் குலுங்கியது திபெத் :அச்சத்தில் மக்கள்

இன்று அதிகாலை நிலநடுக்கத்தால் குலுங்கியது திபெத் :அச்சத்தில் மக்கள்

0

திபெத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 2:41 மணியளவில் நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது

இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதன்போது நில அதிர்வானது உணரப்பட்டது.

இதனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது சேதமோ பதிவாகவில்லை.

முன்னதாக மே 8 ஆம் திகதி, இந்தப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை நேற்று (11)இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது.

வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே 89 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version