Home இலங்கை சமூகம் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் அனைவருக்கும் தண்டனை உறுதி: நீதி அமைச்சர் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் அனைவருக்கும் தண்டனை உறுதி: நீதி அமைச்சர் தெரிவிப்பு

0

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் அனைவருக்கும் தண்டனை கிடைத்தே தீரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில்
கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி. கொலைக் குற்றவாளிகள், இலஞ்ச, ஊழல்
மோசடியாளர்கள் எவரும் தப்பவே முடியாது. அனைத்துக் குற்றவாளிகளும் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

விசாரணைகள் 

அந்தவகையில் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள்
எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

இதன்போது புதிய
தகவல்களும் வெளிவருகின்றன.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனை கிடைத்தே தீரும்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய எவரையும் எமது
அரசு பாதுகாக்காது. இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது
ஆட்சியில் நீதி கிடைத்தே தீரும் எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version