Home இலங்கை சமூகம் ஆறு வருடங்களாகியும் நீதியின்றியும் ஆறாத வடுவாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

ஆறு வருடங்களாகியும் நீதியின்றியும் ஆறாத வடுவாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

0

தெய்வங்கள் கண் மூடிய அந்த ஒரு நாள், சுவடுகள் மறைந்தாலும் அதன் துயரம் இன்னும் மறையவில்லை.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் எனும் ஒரு துர்பாக்கிய சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஆறு வருடம் நிறைவடைந்துள்ளது. 

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 407 பேர் காயமடைந்தனர்.

6ஆம் ஆண்டு நினைவு

இந்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 6 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஏப்ரல் 21 தாக்குதலின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை 8.30 அளவில் விசேட ஆராதணைகள் இடம்பெறவுள்ளன. 

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் தலைமையில் இந்த ஆராதணை நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

ஆராதணை நிகழ்வு 

அத்துடன் குறித்த பகுதியில் இன்று நடைபவனி ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், காலை 8.45 அளவில் நாடளாவிய ரீதியாக உள்ள சகல வழிபாட்டு ஸ்தலங்களிலும் மணி ஓசை எழுப்பப்படவுள்ளதுடன், 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது. 

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

you may like this


https://www.youtube.com/embed/ylMOHpYFCGMhttps://www.youtube.com/embed/DoSZE1RIQ4c

NO COMMENTS

Exit mobile version