முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடு முழுவதும் ஆலயங்களில் இடம்பெற்ற விசேட ஈஸ்டர் திருப்பலி

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயம்

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த திருப்பலியானது, நேற்று சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு நடைபெற்றுள்ளது.

மன்னார் (Mannar) மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்லியாக ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தை சூழ பொலிஸார் மற்றும் விசேட
அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

செய்தி – ஆசிக்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு வழிபாட்டின்போது குண்டுத்தாக்குதலுக்குள்ளான
மட்டக்களப்பு (Batticaloa) சீயோன் தேவாலயத்தில் இம்முறை உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொஷான் மகேசனின் தலைமையில்
உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்காக விசேட
பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டதுடன் நாட்டில் சாந்தியும் சமாதானமும்
ஏற்படவும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

செய்தி – குமார்

புத்தளம் சாந்த மரியா ஆலயம்

புத்தளம் (Puttalam) சாந்த மரியா ஆலயத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில்
ஈஸ்டர் தின ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.

ஆலய அருட்தந்தை சுசிரு தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து
திருப்பலியை ஒப்புகொடுத்துள்ளனர்.

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

செய்தி – அசார்

முறிகண்டி தென்னிந்திய திருச்சபை

உயிர்த்த இயேசுவின் சாட்சிப் பயணம் மெழுகுவர்த்தி ஏந்தி இடம்பெற்றதை தொடர்ந்து
வாலிபர்கள் வழிபாட்டை நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, சிரேஸ்ட வண பிதா குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக்கொடுத்துள்ளார்.

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

செய்தி – எரிமலை

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயம் 

கிளிநொச்சியில் (Kilinochi) அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்தில் உயிர்த்த ஞாயிறு
ஆராதனைகள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து
பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

~/easter-sunday-mass-sri-lanka-1711868479

செய்தி – எரிமலை

நாட்டு மக்களுக்கு சமாதானம் நிறைந்த நல்வாழ்வு வேண்டும்!..பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி

நாட்டு மக்களுக்கு சமாதானம் நிறைந்த நல்வாழ்வு வேண்டும்!..பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!..ரணில் உறுதி

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!..ரணில் உறுதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்